ஜனாதிபதி ட்ரம்புடன் இணைய சம்மதம்! – மைக் பென்ஸ்

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடன் இணையுமாறு அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது நேற்று (புதன்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் அமர்ந்திருந்த துணை ஜனாதிபதி மைக் பென்ஸிடம் தன்னுடன் எதிர்வரும் தேர்தலில் இணையக் கேட்டபோது, அதற்கு உடனே மைக் பென்ஸ் தனது உடன்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

மைக் பென்ஸின் உடனடியான பதிலை தான் எதிர்பார்க்காவிட்டாலும், அது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !