ஜனாதிபதி செயலணியின் ஆலோசகராக நஸீர் அஹமட் நியமனம்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசகராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஏ.நஸீர் அஹமட் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும்விதத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பணிப்புரை விடுக்கவும், ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவுமென அமைச்சரவையால் தீர்மானமெடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஜனாதிபதியின் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ள நஸீர் அஹமட் குறித்த நியமனத்திற்கான தனது பணியை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் யுத்தத்தினால் கடந்த 30 வருட காலமாக சிதைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை நிலைபேறான அபிவிருத்தி என்ற இலக்கை நோக்கி நகர்த்த இந்த நியமனம் தனக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !