ஜனாதிபதி செயலகம் என்பது பைத்தியக்காரர்கள் இருக்கும் கூடாரம் என்கிறது ஜே.வி.பி!

மகிந்த காலத்து ஊழல் மோசடி தொடர்­பான விசா­ர­ணைக் குழு­வால் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் சமர்­பிக்­கப்­பட்ட அறிக்கை தம்­மி­டம் இல்லை என்று ஜனாதிபதி செயலக செய­லர் கூறி­யுள்­ளார். அப்­ப­டி­யா­யின் அது ஜனாதிபதி செய­ல­கம் கிடை­யாது. பைத்­தி­யக்­கா­ரர்­கள் இருக்­கும் கூடா­ரா­மா­கும். இவ்­வாறு மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்­தார்.

கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­தின் பிர­கா­ரம் பிணை­முறி மற்­றும் பெரிய ஊழல் மோசடி தொடர்­பான இரு அறிக்­கை­க­ளை­யும் நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பித்­தி­ருக்க வேண்­டும்.
அதன்­பின்­னரே பிரதமருக்கு உரை நிகழ்த்த இட­ம­ளித்­தி­ருக்க வேண்­டும். அறிக்­கை­கள் தொடர்­பான விட­யம் தீர்­வின்றி இருக்­கை­யில் சபா­நா­ய­கர் அதனை முடிக்­கா­மல் இரண்­டா­வது நிகழ்ச்சி நிர­லான பிரதமர் உரைக்கு சென்­றமை பெரும் தவ­றா­கும்.

அமர்­வுக்­கான அறிக்­கை­கள் இரண்­டை­யும் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அதி­கா­ரி­களை அழைத்து விசா­ரித்து இருக்க வேண்­டும். எனி­னும் தீர்க்க வேண்­டிய பிரச்­சி­னையை தட்­டிக்­க­ழித்து ரணி­லின் உரைக்கு சென்­றது பெரும் தவ­றா­கும். இதன் ஊடாக சபை தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்­டுள்­ளது.

எப்­ப­டி­யா­வது பிணை­முறி தொடர்­பான அறிக்­கையை 17 ஆம் திகதி சமர்ப்பிப்­பது போன்று முன்­னைய ஆட்­சி­யின் பெரிய ஊழல் மோசடி தொடர்­பான அறிக்­கை­யை­யும் நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்க வேண்­டும் – என்­றார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !