ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய காலமானார்

ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தனது 74ஆவது வயதில் காலமானார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை பொரளை மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1972ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பதவியேற்ற ஹேமந்த வர்ணகுலசூரிய, 2006ஆம் ஆண்டு ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, கடந்த 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளராகவும் சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !