ஜனாதிபதி கொலை சதி விவகாரம் – பொலிஸ்மா அதிபரிடம் விசாரணை

ஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, அரசாங்க இரசாயண பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வெளியிடப்பட்ட குரல் பதிவுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் இன்று (திங்கட்கிழமை) குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த கொலைத் திட்டத்துடன் தொடர்புடைய குரல் பதிவுகளில் பொலிஸ்மா அதிபரின் குரல் பதிவுகளும் உள்ளடங்குகின்றனவா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவே அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 09.30 மணியளவிலிருந்து அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியதாக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !