ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் புதிய அமைச்சரவை..

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல் இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் 11 ஆண்கள் 11 பெண்கள் என மொத்தம் 22  அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மிக குறிப்பாக, உள்துறை அமைச்சராக Gérard Collomb தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நீதி அமைச்சராக  François Bayrou தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மிக முக்கியமாக பொருளாதார அமைச்சராக யாரை மக்ரோன் நியமிப்பார் என பெரும் விவாதமே எழுந்தது. இந்நிலையில் பொருளாதார அமைச்சராக Bruno Le Maireஐ நியமித்துள்ளார். தொழில்துறை அமைச்சராக Muriel Pénicaud நியமிக்கப்பட்டுள்ளார். தவிர, மேலும் பலரை அமைச்சர்களாக நியமித்துள்ளார். இதில் பலர் இதற்கு முன்னர் பிரெஞ்சு அரசியலுக்கு அறிமுகமில்லாத புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்பட்ட இந்த புதிய அமைச்சரவை நாளை வியாழக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் காலை 11 மணிக்கு ஜனாதிபதி மக்ரோனைச் சந்திக்கின்றனர்.
அதேவேளை முன்னெப்போதும் இல்லாத வகையில் 11 ஆண்கள், 11 பெண்கள் என சமத்துவமாக அமைச்சர்களை நியமித்திருப்பது குறித்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.


(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !