Main Menu

ஜனா­தி­பதியின் விடு­த­லைப்­பு­லிகள் சம்­பந்­த­மான கூற்று நம்­பிக்­கைத் ­து­ரோ­க­மா­னது – பிரபா கணேசன்

அண்­மையில் போதைப்­பொருள் ஒழிப்பு சம்­பந்­த­­மான நிகழ்வில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, விடு­த­லைப்­பு­லிகள் போதை­வஸ்து வியா­பாரம் செய்தே யுத்தம் நடத்­தி­னார்கள் என்று தெரி­வித்­தி­ருப்­பது அவ­ருக்கு வாக்­க­ளித்த தமிழ் மக்­க­ளுக்கு அவர் இழைத்த பாரிய துரோ­க­மாகும்  என ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் முன்னாள் பிரதியமைச்­ச­ரு­மான பிரபா கணேசன்  தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது;

2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலின் போது வட­கி­ழக்­கிற்கு பிர­சாரம் செய்யச் சென்ற மைத்­தி­ரி­பால சிறி­சேன, விடு­தலைப் புலிகள் யுத்தம் புரிந்­தது தமிழ் மக்­களின் உரி­மை­களை வென்­றெ­டுக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே. ஆகவே அவர்­களின் நோக் ­கங்­களை நிறை­வேற்­று­வ­தற்­காக தமிழ் மக்­க­ளுக்கு அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு தீர்­வை வழங்­குவேன் என்று தெரி­வித்­தி­ருந்தார். 

அதற்­க­மைய தமிழ் மக்கள் அவ­ருக்கு முழு­மை­யான ஆத­ர­வை வழங்­கி­யி­ருந்­தார் கள். ஆனால் இன்று போதைப்­பொருள் ஒழிப்பு நிகழ்வில் விடு­த­லைப் ­பு­லிகள் போதைப்­பொ­ருள்­களை விற்று யுத்தம் புரிந்­தார்கள் என்று கூறி­யி­ருப்­பது தமிழ் மக்­க­ளுக்கு அவர் இழைத்­தி­ருக்கும் பாரிய துரோ­க­மாகும். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, ஒருபோதும் விடு­தலைப் புலிகள் போதை­வஸ்து வியா­பா­ரத்தில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள் என்று தெரி­வித்­தி­ருக்­க­வில்லை. விடு­த­லைப்­ பு­லி­களின் காலத்தில் போதை­வஸ்­துகள் இன்றி மக்கள் கட்­டுப்­பா­டுடன் வாழ்ந்து வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இன்­றைய ஜனா­தி­ப­தியின் கூற்று மக்கள் மத்­தியில் வேடிக்­கை­யாக இருக்­கின்­றது. ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சா­ரத்தின் போது 100 நாள் வேலைத்­திட்­ட­த்தை வைத்­துக்­கொண்டு வாக்­கு­களைக் கோரி­னார்கள். அண்­மையில் 100 நாள் புத்­தகம் பற்றி தனக்கு ஏதும் தெரி­யாது என்­கின்றார். அதே போல் ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­யுற்ற மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு தான் வீட்­டுக்குச் செல்ல வானூர்தி வழங்­கி­ய­தாக பெரு­மை­யுடன் மக்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்தார். அதன் பிறகு இவ்­வா­னூர்தி சம்­பந்­த­மாக தனக்கு ஏதும் தெரி­யாது என்றும் யார் கொடுத்­தது என்­ப­தற்கு விசா­ரணை செய்­யப்­பட வேண்டும் என்றும் தெரி­விக்­கின்றார். ஜனா­தி­பதி பத­வி­யேற்­றதும் தான் இனி போட்­டி ­யிடப் போவ­தில்லை என்றும் தெரி­வித்­தி­ருந்தார். இப்­பொ­ழுது தான் மீண்டும் போட்­டி­யிடப் போவ­தாகத் தெரி­விக்­கின்றார். 

அண்­மையில் இடம்­பெற்ற குண்­டு ­வெ­டிப்பை சிங்­கப்­பூரில் இருந்த நண்பர் ஒரு­வரின் முகநூல் வாயி­லா­கவே அறி­யக்­கூ­டி­ய­தாக இருந்­தது என்றும் தெரி­வித்­தி­ருந்தார். இன்று தனக்கு பாது­காப்பு அச்­சு­றுத்தல் இருப்­ப­தாகக் கூறு­கின்றார். அப்­ப­டி­யானால் பாது­காப்பு அமைச்­ச­ராக இவர் இருந்து கொண்டு தேசிய பாது­காப்பை எவ்­வாறு உறு­தி­ப்ப­டுத்­துவார். இவர் ஒரு நகைச்­சுவை ஜனா­தி­ப­தி­யா­கவே மக்கள் மத்­தியில் தெரி­கின்றார். இவரை பத­விக்கு கொண்டு வந்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரும் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்­சி­க­ளுமே இதற்கு பதி­ல­ளிக்க வேண்டும்.

நான் வன்னி மாவட்­டத்தில் அபி­வி­ருத்திப் பணிப்­பா­ள­ராக செயல்­பட்ட போது நான் தெரி­வித்த, தமிழ் மக்­களின் நலன் கரு­திய எந்­த­வொரு வேலைத்­திட்­டத்­தையும் இவர் செய்து கொடுக்­க­வில்லை. மாறாக மஸ்தான், ரிஷாத் போன்­ற­வர்­களின் பேச்­சுக்­க­மைய எனது வன்னி மாவட்ட தமிழ் மக்­களின் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்­க­ வி­ட­வி­ல்லை. 86 வீதம் தமிழ் மக்கள் வாழும் வன்னி மாவட்­டத்தில் ஒரு சத­வீ­தமான வாக்­கு­க­ளை­யேனும் இவரால் மஸ்தான் போன்றவர்களின் ஊடாகப் பெற முடியாது. 

இன்று வன்னி மாவட்ட மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை முற்றுமுழுதாக நிராகரித்துள்ளார்கள். சுமந்திரன் போன்ற ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு பெற்றுக் கொடுக்கும் இடைத்தரகர்களை இன்று மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். எனது தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கி ரஸ் ஊடான அபிவிருத்தியை பெரிதும் எதிர்பார்க்கின்றார்கள் என்றார்.

பகிரவும்...