ஜனாதிபதியின் செயற்படுகள் வெறுக்கத்தக்கவை – வாசுதேவ குற்றச்சாட்டு
தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பாரிய தடைகளை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவை தற்போது சவாலுக்கு உட்படுத்த முயற்சிப்பது தேர்தலை பிற்போடுவதற்கான முயற்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு நாடாளுமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்படுகள் வெறுக்கத்தக்கவை என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஆளும் தரப்பினர் நாட்டு மக்களின் வாக்குரிமை என்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என கேள்வியெழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த முரண்பாடுகளை களைந்து, நாட்டில் சுதந்திரமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.