சோனியாவின் மருமகனிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை!

நில முறைகேடு வழக்கு தொடர்பில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ரொபர்ட் வதேராவிடம்  இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ரொபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் ஹொஸ்பிடாலிட்டி என்ற நிறுவனம் ராஜஸ்தான் பிகானூரில் போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு நேற்று ஒன்பது மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாக ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் விசாரணை  இடம்பெறுகிறது.

குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !