Main Menu

சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

இடது சாரிகளான சோசிலிசக் கட்சியின் (Parti socialiste) 2022 ஆம் ஆண்கான ஜனாதிபதி வேட்டபாளரிற்கான தெரிவுகள் உள்ளக விவாதங்களிற்கு உட்பட்டுள்ளது. இதன் முடிவில் உள்ளக வாக்கெடுபபு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோசலிசக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான ஜோன்-கிறிஸ்தொப் கம்பதெலி (Jean-Christophe Cambadélis) 2022 இற்கான ஜனாதிபதி வேட்பாளரிற்கான போட்டிக் களத்தில் இறங்கி உள்ளார். 

 ஆனால் மிகவும் திடகார்த்திரமாக உள்ளகப் போட்டியில் பரிசின் நகரபிதா அன் இதால்கோவும் ( Anne Hidalgo) களம் இறங்கி உள்ளார். 

 சோசலிசக் கட்சியின் புதிய பொதுச் செயலாளரும், அன் இதால்கோவிற்கு ஆதரவாகவே உள்ளார். எனினும் எதிர்வரும் ஒக்டோபர் 14ம் திகதி, சோசலிசக் கட்சிக்குள் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு 2022 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எந்தவிதமான சந்தேகங்களும் இன்றி, அன் இதால்கோவே ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவார் எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.