செரீனா வில்லியம்ஸ் மீண்டும் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்

உலகின் முதனிலை டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மீண்டும் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். செரீனா வில்லியம்ஸ், துவரையில் 23 தடவைகள் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை ஒன்றை பிரசவித்த செரீனா கடந்த சில காலங்களாக ஓய்வில் இருந்தார்.

இந்தநிலையில் எதிர்வரும் வாரம் டுபாயில் நடைபெறவுள்ள டென்னிஸ் போட்டித் தொடர் ஒன்றில் செரீனா விளையாட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  முபாடாலா உலக சாம்பியன்ஸிப் டென்னிஸ் போட்டித் தொடரில் செரீனா விளையாட உள்ளார்.

இந்தப் போட்டியில் பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற ஜெலேனா ஒஸ்டேபெங்கோ ( Jelena Ostapenko )வை செரீனா எதிர்த்தாட உள்ளார். செரீனா வில்லியம்ஸ் கடந்த ஒரு வருடமாக போட்டிகளில் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !