சென்னையைச் சேர்ந்த 12 வயது குகேஷ் செஸ் கிராண்ட் மாஸ்டராகத் தேர்வு

சென்னையை சேர்ந்த 12 வயது மாணவர் குகேஸ் நாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்று உள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் குகேஷ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார். 12 வயதில் இந்த பட்டத்தை பெற்றதன் மூலம் நாட்டிலேயே மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.

மேலும் உலகிலேயே மிக இளைய வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ், உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதே தமது லட்சியமென கூறியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !