சென்னையில் தொடரும் போராட்டங்கள்: ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு!

சென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஆளுநர் மாளிகையில் இணை ஆணையர் மற்றும் 4 துணை ஆணையர் தலைமையில் 1000 பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித் மாவட்டம் தோறும் சென்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதுடன், பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்து அவை குறித்து அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனைகளையும் நடத்தி வருகின்றார்.

இந்நிலையில், ஆளுநரின் இந்த செயல்பாடுகளுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆளுநரின் நடவடிக்கை மாநில உரிமைகளை பறிப்பதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, தமிழக ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சியினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணிகளையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையிலேயே சென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாளிகையைச் சுற்றிப் பொலிஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !