சென்னையில் உள்ள கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்ற தீர்மானம்!
சென்னையில் உள்ள கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்ற சுகாதாரத்துறை தீர்மானித்துள்ளது.
இதன்படி சென்னையில் உள்ள 19 கல்லூரிகள் கொரோனா மையங்களாக மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதன்காரணமாக வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவுதாக கூறப்படுகிறது. இந்நிலையிலேயே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், சளி மற்றும் காய்ச்சல் என அறிகுறி உள்ளவர்களை இங்கு தங்க வைத்து சிகிச்சை அளிக்கவும், தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களை மட்டும், அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பகிரவும்...