சுஷ்மா சுவராஜ் மாலைதீவுக்கு விஜயம்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மாலைதீவுக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்தச் சுற்றுப்பயணத்தின்போது, அந்நாட்டின் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர்களுடன் விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் பதவியேற்ற பிறகு, இந்தியா சார்பில் அந்நாட்டுக்கு மேற்கொள்ளப்படும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் ஆட்சியில் இருநாடுகளுக்கும் இடையே பலவீனம் அடைந்த நல்லுறவை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் குறித்த பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !