சுவீடனில் பற்றி எரிந்த பேருந்து – சாரதி படுகாயம்!

சுவீடனில் பேருந்து ஒன்று திடீர் என தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பேருந்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினைத் தொடர்ந்தே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் பேருந்தின் சாரதியே படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த பேருந்தில் பயணிகள் எவரும் பயணித்திருக்கவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் இதுவொரு விபத்தாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பேருந்து தீப்பற்றி எரிந்த போது எடுக்கப்பட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !