Main Menu

சுவிஸ் விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் இறுக்கம்!

சுவிஸ் விமான சேவை நிறுவனம் விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் பயணிகள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழானது பயணத்தின் 48 மணி நேரம் முன்பு வழங்கப்பட்டதாக இருத்தல் வேண்டும் எனவும், கூடுதலாக சான்றிதழ்கள் ஒரு படிவமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பயணிகளினதும் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாகவே குறித்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடானது, சுவிஸ் விமான சேவை நிறுவன குழுமத்தில் உள்ள Lufthansa, Austrian, Brussels மற்றும் Eurowings விமான சேவை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.