சுவிஸ் பனிச்சரிவில் பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் இருவர் சடலமாக மீட்பு!

மேற்கு சுவிட்சர்லாந்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு நபர்களில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேற்கு சுவிஸின் வலாய்ஸ் மாகாணத்தில் உள்ள Vallon d’Arbi பனி மலை பகுதியில் கடந்த வெள்ளியன்று பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த பனிச்சரிவில், அப்பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த பிரான்ஸை சேர்ந்த மூவர் மற்றும் சுவிஸ் குடிமகன் ஒருவர் என நான்கு பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் விருவிருப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், பிரான்ஸை சேர்ந்த 20 மற்றும் 25 வயதான இரு சுற்றுலா பயணிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள இருவரின் நிலை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. 2,200 அடி உயரம் கொண்ட மலை என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த மாதம் இதேபோல் ஆல்ப்ஸ் பகுதியில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !