Main Menu

சுவிஸ் தேசிய தினத்தில் மோதல் – ஒருவர் காயம் இருவர் கைது!

சுவிஸ் தேசிய தினத்தின் போது இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சுவிஸின் சூரிச் மண்டலத்தில் உள்ள பிரபல உணவக விடுதி ஒன்றில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த 41 வயதானவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.