சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம்: ஓரிரு வாரங்களுக்குள் உண்மைகள் வெளிப்படும் – கெஹெலிய
இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் சாட்சியுடன் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்று முதலீட்டு மேம்பாடு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரக ஊழியர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கடத்தப்பட்டார் என்று ராஜித சேனாரத்ன கூறுவது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயலாகும்.
இவர்கள் இதற்கு முன்னரும் இவ்வாறான கீழ்தரமான அரசியலில் ஈடுபட்ட முயற்சித்து அந்த முயற்சிகள் தோல்வியடைந்தமையால் மீண்டும் அவ்வாறு செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
எனவே இவ்வாறு வெளிநாடுகளில் இலங்கையை காட்டி கொடுக்கும், நாட்டுக்கு அவ பெயரை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.