சுவிஸ் இளைஞர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!

சுவிஸில் இளைஞர்களுக்கான புதிய பயண அட்டை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் முதல் இந்த பயண அட்டைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய ஏற்கனவே நடைமுறையில் இருந்த Gleis/Voie 7 பயண அட்டைக்கு பதிலாக, seven25 என்னும் புதிய பயண அட்டை பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

தற்போதுள்ள பயண அட்டையைப் போலவே இந்த seven25 பயண அட்டையும், 16 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், சுவிஸ் பொதுப்போக்குவரத்துக்களில் இரண்டாம் வகுப்பில் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆண்டு கட்டணத்தில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

முன்பு போலவே இந்த புதிய அட்டை பயன்படுத்துபவர்களும் நகர போக்குவரத்து வாகனங்களில் சிறப்பு இரவுக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் சில ஆச்சரியங்களும் இருப்பதாக கூறப்படுகின்றது.

முன்பு சில பேருந்து சேவைகளுக்கு, தனியே கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. எனினும், புதிய அட்டையைக் கொண்டு பயணிகள் ஒரே அட்டை மூலமாகவே பேருந்து சேவைகளையும் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !