சுவிஸ் இண்டோஸ் டென்னிஸ் – ஸ்வெரவ் காலிறுதிக்கு தகுதி!

ஆண்களுக்கே உரித்தான சுவிஸ் இண்டோஸ் டென்னிஸ் விளையாட்டு தொடரின் ஒற்றையர் பிரிவு, இரண்டாம் சுற்று போட்டியொன்றில் ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இப்போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், அவுஸ்ரேலியாவின் அலெக்ஸி பாப்பிரைனுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் அதே ஆக்ரோஷத்தை தொடர்ந்த ஸ்வெரவ், 6-4 என செட்டை கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !