Main Menu

சுவிஸ்லாந்தில் இரண்டாயிரத்தை நெருங்கும் கொவிட்-19 உயிரிழப்பு!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருங்குகிறது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் இதுவரை ஆயிரத்து 996பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இதுவரை மொத்தமாக 38ஆயிரத்து 760பேர் கொவிட்-19 பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 311பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்து 264பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன், இதுவரை 33ஆயிரத்து 500பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.