சுவிஸில் 3 பெண்களை ஏமாற்றி 180.000 பிராங்குகள் மோசடி செய்த மருத்துவர்!
சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டத்தில் மருத்துவர் ஒருவர் 3 பெண்களை ஏமாற்றி பெருந்தொகை மோசடி செய்த விவகாரத்தில் 40 மாதம் சிறை தண்டனை பெற்றுள்ளார்.
தற்போது 62 வயதாகும் அந்த மருத்துவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 44 மாத சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில்,சூரிச் உச்ச நீதிமன்றம் 40 மாதங்களகாக குறைத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
மோசடி வழக்கில் சிக்கிய குறித்த மருத்துவர் கடந்த 2013 முதல் 2016 வரையான காலகட்டத்தில் 3 பெண்களிடம் இருந்து மொத்தமாக 180,000 பிராங்குகள் மோசடி செய்துள்ளார்,
அந்த தொகையை அவர் சொகுசு வாழ்க்கைக்காக செலவிட்டுள்ளார்.
இந்த 3 பெண்கள் மட்டுமின்றி, குறித்த மருத்துவருக்கு மேலும் பல பெண்களிடம் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் அம்பலமானது.
கடந்த 2013 ஆம் ஆண்டு பெர்ன் மண்டலத்தில் இதுபோன்ற ஒரு மோசடி விவகாரத்தில் சிக்கி தண்டனை பெற்றுள்ளார்.
அந்த விவகாரத்தில் 7 பெண்களை இவர் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. மேலும், இவர் நெருங்கி பழகிய பெண்களிடம், தாம் ஒரு செல்வந்தரான மருத்துவர் எனவும்,
தனிப்பட்டமுறையில் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவருவதாகவும் நம்ப வைத்துள்ளார். ஆனால் நீதிமன்றத்தில், தமது வேலை கிடைப்பதே அரிதாக உள்ளது எனவும், குடியிருப்பு ஏதும் சொந்தமாக இல்லை எனவும்,
பல மில்லியன் பிராங்குகள் கடனில் தவிப்பதாகவும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது