சுவிஸில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய தொழுகை கூடம் மூடப்பட்டது..

சுவிட்சர்லாந்து நாட்டில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய தொழுகை மையம் ஒன்று மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூரிச் மாகாணத்தில் உள்ள An’Nur என்ற இஸ்லாமிய கூடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயங்கி வந்துள்ளது.

இந்நிலையில், ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறிய காரணத்திற்காக 2016-ம் ஆண்டு இறுதிக்குள் தொழுகை மையத்தை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

ஆனால், பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஓராண்டு கூடுதலான நேரம் கொடுக்கப்பட்டது.

இது போன்ற ஒரு சூழலில் தொழுகையில் மைத்தில் இமாமாக செயல்பட்டு வந்த ஒருவர் சர்ச்சைக்குரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘தொழுகை மையத்திற்கு வந்து தொழுகையில் ஈடுப்படாமல் இருக்கும் பிற இஸ்லாமியர்களை கொல்லுங்கள்’ என இமாம் கூறியதாக தகவல்கள் வெளியானது.

ஆனால், இதனை இமாம் மறுத்துள்ளார். எனினும், தொழுகை கூடத்தை மூட வேண்டும் என கடும் நெருக்கடி ஏற்பட்டது.

தற்போது இஸ்லாமிய மையத்தை மூடுவதற்கு வழங்கப்பட்ட கூடுதலான காலக்கெடு முடிந்து விட்டதால் அதனை தற்காலிகமாக மூடிவிட்டதாக அதன் தலைவர் Atef Sahnoun என்பவர் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !