சுவிஸில் இரண்டு ரயில்கள் மோதல் : 30 பேர் படுகாயம்

சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் உரி மாகாணத்தில் உள்ள Andermatt என்ற நகரில் தான் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்துக் குறித்து சற்று முன்னர் வெளியான தகவலில் இரண்டு ரயில்களில் ஒன்றான HGe 4/4 II என்ற ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரயில் நிலையத்திலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து குறித்து முழு விபரம் வெளிவராத நிலையில் காயம் அடைந்தவர்கள் தற்போது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.



(மேலும் படிக்க) »



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !