சுவிஸின் Piz Cengalo பகுதியில் பயங்கர நிலச்சரிவு; ஒருவர் பலி, 8பேர் காணவில்லை!

சுவிட்சர்லாந்து நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் காணாமல் போனதை தொடர்ந்து தற்போது தேடுதல் பணியை பொலிசார் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் Grisons மாகாணத்தில் உள்ள Piz Cengalo பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலியானதாகவும், 8 பேர் காணாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகின.

இத்தகவல்களை தொடர்ந்து 120 பேர் அடங்கிய மீட்புக் குழுவினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியை சுற்றியுள்ள 100 பேர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

நிலச்சரிவு ஏற்பட்டு 3 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது 8 பேரையும் தேடும் பணியை பொலிசார் நிறுத்தியுள்ளனர்.

இதுக் குறித்து பொலிசார் வெளியிட்ட தகவலில், ‘காணாமல் போன 8 பேரை கண்டுபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களில் 4 பேர் ஜேர்மனியர்கள், இருவர் ஆஸ்திரியர்கள் மற்றும் இருவர் சுவிஸ் நாட்டை சேர்ந்தவர்கள்.

நிலச்சரிவு ஏற்பட்டதற்கு பருவநிலை மாற்றமும் ஒரு காரணம்.

மேலும், இப்பகுதியில் இனிவரும் நாட்களிலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக புவியியல் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !