சுவிஸின் முதல் போர் பெண் விமானி

சுவிஸில் முதன்முறையாக பெண் ஒருவர் போர் விமானியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

லெப்டினன்ட் Fanny Chollet என்ற பெண் விமானி, F/A-18 ரக போர் விமானம் ஒன்றை ஓட்டுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த பயிற்சியின் நிறைவில் Chollet, சுவிஸ் இராணுவத்தில் முதல் பெண் விமானியாக கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

26 வயதான Chollet, தனது 17 வயது முதலே ஒரு போர் விமானியாக வேண்டும் என்ற முனைப்பில் செயற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இதற்கமைய கடந்த 2012ஆம் ஆண்டு விமானியாவதற்கான பயிற்சியை தொடங்கிய Chollet, விமானவியலில்  பட்டமும் பெற்றுள்ள Chollet விரைவில் தனது பயிற்சிகளை நிறைவு செய்து கடமைகளை பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !