சுவிட்ஸர்லாந்து குடியிருப்பொன்றில் தீ: 6 பேர் உயிரிழப்பு

சுவிட்ஸர்லாந்திலுள்ள குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் சிறுவர்களும் உள்ளடங்குவதாக சுவிட்ஸர்லாந்தின் வடமேற்கு பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பின் கீழ்தளத்தில் ஏற்பட்ட தீ பின்னர் ஏனைய குடியிருப்புகளுக்கு பரவியதாகவும், பாரிய புகையை கக்கியதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.  அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த குடியிருப்பில் சுமார் 20 பேர் தங்கியிருந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியாளர்களும் அருகிலுள்ள குடியிருப்பிலுள்ளவர்களையும் வெளியேற்றியுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர்கள் மீளவும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சுவிஸ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !