Main Menu

சுவிட்ஸர்லாந்தில் இரவு விடுதிக்கு வௌியே துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்!

சுவிட்ஸர்லாந்தின் பாஸெல் நகரில் உள்ள இரவு விடுதியொன்றுக்கு வெளியே, இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாஸெல் நகரில் உள்ள இரவு விடுதிக்கு வெளியே ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 29 வயதான பிறிதொருவர் காயமடைந்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பியோடிய நபர் 30 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் துப்பாக்கியால் சுட்டதற்கான காரணம் தெரியாத நிலையில், பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.