சுவிட்சர்லாந்து நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் மீது பாலியல் தாக்குதல்!

சுவிட்சர்லாந்து நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்திய இருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சுவிஸின் பேசல் மாகாணத்தில் தான் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் Liestal நகரில் இருந்து Aesch நகருக்கு ரயில் ஒன்று மாலை 4.11 மணியளவில் புறப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் மனநலம் பாதிக்கப்பட்ட 21 வயதான இளம்பெண் ஒருவரும் பயணித்துள்ளார்.

ரயில் சென்றடையும் தூரம் வரை அப்பெண்ணிடம் இரண்டு வாலிபர்கள் பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இறுதியாக இறங்க வேண்டிய இடத்தில் ரயில் நின்றதும் இளம்பெண்ணை அழைத்துச் சென்ற சிலர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதுக் குறித்து நேற்று பொலிசார் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் தாக்குதல் நடத்திய இருவரை தீவிரமாக தேடி வருகிறோம்.

தாக்குதல் நடத்திய இருவரும் கருப்பினத்தை சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ரயிலில் சம்பவம் நிகழ்ந்தபோது நேரில் கண்டவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தெரிவித்து இதுபோன்ற தாக்குதல்களை தவிர்க்குமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !