சுவிட்சர்லாந்து நாட்டில் சரியான நேரத்தில் உதவ மறுத்ததால் வயிற்றிலேயே குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம்!

சுவிட்சர்லாந்து நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு சரியான நேரத்தில் உதவ மறுத்ததால் வயிற்றிலேயே குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியா நாட்டை சேர்ந்த தம்பதி இருவர் கடந்த 2014-ம் ஆண்டு இத்தாலியில் புகலிடம் பெறுவதற்காக சென்றுள்ளனர்.

பயணத்தில் 22 வயதான கர்ப்பிணி பெண் ஒருவரும் இருந்துள்ளார்.

இந்நிலையில், தம்பதி இருவரும் தவறுதலாக பிரான்ஸ் மற்றும் சுவிஸ் எல்லையில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

சுவிஸில் உள்ள வாலைஸ் எல்லைப் பொலிசார் கர்ப்பணிப் பெண்ணை சோதனை செய்துள்ளார். அப்போது, அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

சுவிஸ் வழியாக பயணிக்க அனுமதிக்க முடியாது எனக் கூறிய பொலிஸ் அதிகாரி இருவரையும் பேருந்து ஒன்றில் ஏற்றிவிட்டு அனுப்பியுள்ளார்.

பேருந்தில் பயணம் செய்தபோது கர்ப்பிணிக்கு ரத்தப்போக்கு தொடங்கியுள்ளது. சுவிஸில் உள்ள Grig நகரில் இறங்கிய பின்னர் ரத்தப்போக்கு கடுமையாக அதிகரித்துள்ளது.

மனைவியின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் அவரை அவசரமாக மருத்துவமனையில் அனுமதிதனர்.

ஆனால், காலதாமதம் ஆனதால் வயிற்றிலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.

இதுக் குறித்து மருத்துவர்கள் பேசியபோது, ‘கர்ப்பிணிக்கு சுவிஸ் எல்லை பொலிசார் சரியான முறையில் உதவி செய்திருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம்’ என வேதனை தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பிறகு இத்தாலிக்கு சென்ற தம்பதி இருவரும் அங்கு புகலிடமும் பெற்றுள்ளனர்.

ஆனால், இவ்விவகாரம் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து குறிப்பிட்ட எல்லை பொலிசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !