சுவிட்சர்லாந்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு பரவும் மூளைக்காய்ச்சல் நோய் – மத்திய அரசு தகவல்

சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட உண்ணிகளால் பரவும் மூளைக்காய்ச்சல் நோய் 2018 ஆம் ஆண்டு எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

குறித்த காரணங்களால் சுவிட்சர்லாந்தின் முக்கிய பகுதிகளை ஆபத்தான பகுதிகளாக பொது சுகாதார அலுவலகம் அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் 2018 ஆம் ஆண்டு மட்டும் உண்ணிகளால் பரவும் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 380 என தெரியவந்துள்ளது.

இது கடந்த 2017 ஆம் ஆண்டை விடவும் அதிகம் என தெரியவந்துள்ளது. இதனால் குறித்த பகுதிகளை ஆபத்தான இடங்கள் என பொது சுகாதார அலுவலகம் எச்சரிக்கை விடுத்தும் போதிய பலன் கிட்டவில்லை என கூறப்படுகிறது.

இருப்பினும் சுவிட்சர்லாந்தில் உள்ள சுமார் 30 சதவிகித மக்கள் இதற்கான நோய் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஒட்டுண்ணிகளால் ஆபத்து இருப்பதால் மேலும் எச்சரிக்கை விடுக்க இருப்பதாகவும், எதிர்வரும் ஜனவரி பாதியில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

குறித்த நோய் தடுப்பூசியானது 6 வயது வரையான சிறார்களுக்கு கட்டாயம் என பொது சுகாதார அலுவலகம் அறிவித்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !