சுவிட்சர்லாந்தில் இரயில் ஒரு நிமிடம் முன்னதாக வந்ததால் வழக்கு தொடர்ந்த நபர்

சுவிட்சர்லாந்தில் வழக்கம் போல் வரும் இரயில் சரியான நேரத்திற்கு வரமால், அதற்கு ஒரு நிமிடம் முன்பு வந்ததால், ரயில்வே மீது ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Sebastian Heitkamp என்பவர் சூரிச்சின் Enge ரயில் நிலையத்திலிருந்து Winterthur செல்வதற்காக, அடித்துப் பிடித்து ஓடி வந்தார்.

ரயில் புறப்படவேண்டிய நேரம் காலை 6.18, ஆனால் ரயில் 6.17க்கே புறப்பட்டு விட்டது.

ஓடி வந்தும் Sebastian ஆல் ரயில் செல்வதை, வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. அடுத்த அரை மணி நேரத்திற்கு ரயில் எதுவும் இல்லை.

முக்கியமான மீட்டிங் ஒன்றிற்கு செல்ல வேண்டியிருந்ததால், Sebastian டாக்சி பிடித்து அலுவலகம் சென்று சேர்ந்தார்.

நேரத்திற்கு அலுவலகம் சென்று விட்டாலும், அவருக்கு 180 சுவிஸ் ப்ராங்குகள் செலவானது.

ரயில்வே நிர்வாகம் சம்பவம் நடந்ததை ஒப்புக் கொண்டாலும், முன்னரே புறப்படுவதில் தவறு ஒன்றும் இல்லை, அது நல்லதுதான் என்று வாதிட்டது.

இதனால் Sebastian இழப்பீடு கோரி, ரயில்வே மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !