சுற்றுலா பயணிகள் குறித்து ஆராய்வு
கடந்த நான்கு மாதங்களில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குறித்து இந்திய புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் குறித்தும் அவர்களின் பயணத்தின் பின்னணி குறித்தும் ஆராயப்படுவதாக NDTV தகவல் வெளியிட்டுள்ளது இலங்கையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் காஷ்மீர், கேரளா மற்றும் பெங்களுர் முதலான பகுதிகளில் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர் என இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்படுவதாக இந்திய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி NDTV தகவல் வெளியிட்டுள்ளது.