சுற்றிவளைப்பு தேடுதல் நிறைவு: கிளிநொச்சியில் பதற்றம் தணிந்தது

பளை- கச்சார்வெளி பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரும், பொலிலாரும் மீளப்பெறப்பட்டுள்ள நிலையில் அங்கு நிலவிய பதற்றமான சூழ்நிலை தற்போது தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் நடமாடும் பொலிஸ் பிரிவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதியை இராணுத்தினர் சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதனால் குறித்த பகுதி போர்க்களமாக காட்சியளித்ததுடன், பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவிவந்தது.

தொடர்ந்து மோப்ப நாய்களை கொண்டு பொலிஸார் தேடுதல் பணிகளில் ஈடுபட்ட நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் அப்பகுதியிலிருந்து வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது குறித்த பகுதியிலிருந்து இராணுவத்தினரும், பொலிலாரும் மீளப்பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !