சுரங்கப்பாதையில் இளம்பெண்ணை தாக்கிய மர்ம நபர்கள்! பொலிசார் எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து நாட்டில் ரயில் நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதையில் இளம்பெண் ஒருவரை மர்ம நபர்கள் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரிச் மாகாணத்தில் உள்ள Pfaffikon ரயில் நிலையத்தில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று அதிகாலை 2 மணியளவில் இளம்பெண் ஒருவர் ரயிலில் இருந்து இறங்கி தனியாக நடந்துச் சென்றுள்ளார்.

ஆனால், இளம்பெண்ணிற்கு தெரியாமல் அவரை மூவர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

சுரங்கப்பாதை ஒன்றிற்கு சென்றபோது மூவரும் திடீரென பெண்ணை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர்.

இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத இளம்பெண் தடுமாறி கீழே விழுந்துள்ளார். பெண்ணை மூவரும் பாலியல் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

எனினும், தனது பலம் முழுவதையும் திரட்டிய அப்பெண் மூவரையும் துணிச்சலாக எதிர்த்து தாக்கியுள்ளார்.

சில வினாடிகளில் உரத்த குரலில் சத்தம் எழுப்பியதும் மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பெண் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்ற பொலிசார் சந்தேகத்திற்குரிய சிலரை கைது செய்துள்ளனர்.

மேலும் இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்லும் இளம்பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !