சுயேட்சை வேட்பாளராக பா.ஜ.க. விமர்சகர் பிரகாஷ் ராஜ்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ் ராஜ்  தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை பிரகாஷ் ராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “அனைத்து மக்களும் தங்களது செயற்பாடுகளை மிகவும் பொறுப்புடன்  இவ்வருடத்திலிருந்து முன்னெடுக்க வேண்டுமென்று உறுதியெடுத்து கொள்ள வேண்டும்.

இதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் மக்களாகிய உங்களின் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்துள்ளேன்.

இதனால் தொகுதி பற்றிய விபரங்களை விரைவில் அறிவிப்பதுடன், என்னால் ஒவ்வொரு குடிமகனின் குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்” என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ், பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றார். இந்நிலையில் சுயேட்சை வேட்பாளராக  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடபோவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !