சுப்ரமணியன் சுவாமியின் அமெரிக்க சார்பு ஜெருசல நிலைப்பாடும், இந்திய வெளியுறவு துறையின் பதிலும்…

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அங்கீகரித்து அங்கு தூதரகத்தை மாற்ற முடிவெடுத்துள்ள நிலையில், இந்தியாவும் தன் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் முக்கியஸ்த்தர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

இந்த நிலையில்,ஜெருசலேம் விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள இந்திய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், பாலஸ்தீன் மீதான இந்தியாவின் பார்வையை மூன்றாம் நாடுகள் தீர்மானிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம் மதத்தினருக்கு புனித நகராக இருக்கும் ஜெருசலேம் தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.

டிரம்ப்பின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமல்லாது பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், துருக்கி போன்ற ஐரோப்பிய நாடுகளும், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா போன்ற ஆசிய நாடுகளும், ஆப்ரிக்க நாடுகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்த அமைதியை குலைக்கும் அறிவிப்பு இது என பல்வேறு நாட்டு தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார், “பாலஸ்தீன் மீதான இந்தியாவின் நிலைப்பாடு சுதந்திரமானது மற்றும் நிலையானது. இது நமது பார்வை மற்றும் ஆர்வத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பார்வையை மூன்றாம் நபர்கள் தீர்மானிக்க முடியாது” என என வலியுறுத்தியதன் மூலம் சுப்ரமணியன் சுவாமியின் அமெரிக்க சார்பு நிலைப்பாடு நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !