“ சுனாமியின் சுவடுகள் “

இரண்டாயிரத்தி நான்கு
இருபத்தியாறு மார்கழியில்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கடுகதியாய் வந்து
பல்லாயிரம் உயிர்களை
பலியெடுத்துச் சென்றதுவே
சுனாமியென்ற பேரலைகள் !

ஆண்டுகள் பதின்நான்கு கடந்த போதும்
ஆறவில்லை அவலங்கள்
மாறவில்லை சுனாமியின் சுவடுகள்
காயவில்லை விழியோர நீர்கள்
மாறாத வடுக்களாய் இன்றும் !

தாயை இழந்த பிள்ளைகளாய்
பிள்ளகளை இழந்த தாய்களாய்
தலைவனை இழந்த குடும்பமாய்
தாரத்தை இழந்த தலைவனாய்
உறவுகளை உடமைகளை
உணர்வுகளை இழந்தவர்களாய்
வாழ்கின்றார் அகதிகளாய் !

இன்னுமொரு சுனாமி
இனிமேல் வேண்டாம்
இன்னுயிர்களின் இழப்பு
இத்தோடு முடியட்டும்
இயற்கை அன்னையே
கடலலைத் தாயே
இனியும் சீற்றம் கொள்ளாதே
இன்னுயிர்களைக் கொல்லாதே
சுனாமியின் சுவடுகள்
மாறாத வடுக்களே !

கவியாக்கம் – ரஜனி அன்ரன் (B.A) 26.12.2018« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !