சுதந்திரக் கட்சியின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் ஐ.தே.கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இதுதொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகினால் உடனடியாக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கு இவர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்து வரும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களே இவ்வாறு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் குறித்து குறித்த சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் நல்லாட்சி கூட்டணியிலிருந்து விலகினால், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு இந்த அமைச்சர்கள் உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியே வேண்டும் என மஹிந்த ஆதரவு அணியினர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !