சுகாதாரப் பாதுகாப்பு உடையுடன் நாடாளுமன்றிற்கு அழைத்து வரப்பட்ட ரிஷாட்!
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை அதிகாரிகளினால் நாடாளுமன்றத்திற்கு சற்று முன்னர் அழைத்துவரப்பட்டார்.
சுகாதாரப் பாதுகாப்பு உடையுடன் அவர் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
பொதுச் சொத்துக்கள் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டது.
எனினும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதனால் அவருக்கு அனுமதி வழங்க முடியாதென சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற அதிகாரம் மற்றும் சிறப்புரிமை சட்டத்தின் கீழ் அவரை நாடாளுமன்றுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...