சீன மாணவிகள் தங்கள் கரு முட்டைகளைச் சட்டவிரோதமான முறையில் விற்பனை

சீன பல்கலைக்கழக மாணவிகள் தங்கள் கரு முட்டைகளைச் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
South China Morning Post முன்னெடுத்த விசாரணையிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
மாணவிகள் ஒவ்வொரு கருமுட்டையையும் 100,000 யுவான் வரையிலான விலைக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகின்றது.
கல்வியில் சிறந்து விளங்குபவர்கள், உயரமானவர்கள், அழகிய தோற்றமுடையவர்கள் அதிக விலைக்குத் தங்கள் கரு முட்டைகளை விற்பனை செய்துவருவதாக குறிப்பிடப்படுகின்றது.
சீனாவில் கரு முட்டைகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவற்றை நன்கொடையாக மாத்திரமே வழங்க முடியும்.
சீனாவில் ஒற்றைப் பிள்ளை கொள்கை நீக்கப்பட்டது சட்டவிரோதமாக முட்டைகள் விற்கப்படுவதற்குக் காரணமாய் இருக்கலாம் என கருதப்படுகிறது.
பகிரவும்...