Main Menu

சீனா பயணிக்கவுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த விஜயத்தின் போது சீன ஜனாதிபதி Xi Jinping உள்ளிட்ட சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை தனது இருதரப்பு கடன்களை மறுசீரமைப்பதில் சீனாவுடன் தொடர்ந்து ஈடுபட்டுள்ள நிலையில் இந்த விஜயம் அமையவுள்ளது.

கடந்த வருடம் ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் சீனாவிற்கு மேற்கொண்டுள்ள உத்தியோகப்பூர்வ விஜயம் இதுவே முதல் தடவையாகும்.