Main Menu

சீனாவை தாண்டி உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பில் எந்த அதிகரிப்பும் இல்லை!

சீனாவை தாண்டி உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் (கோவிட் -19) பாதிப்பில் எந்த அதிகரிப்பும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்குதலால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் ஹூபே மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவை தாண்டி உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளது. மேலும் 24 நாடுகளில் 447 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் (கோவிட் -19) காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1483 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், சர்வதேச அளவில், (கோவிட் -19) வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,600ஆக அதிகரித்துள்ளது.