சீனாவுடன் வலுவான உறவைப் பேண விரும்புகின்றோம் – பிளேயர்

சீனாவுடன் வலுவான உறவைப் பேண பிரித்தானியா விரும்புவதாக, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் தெரிவித்துள்ளார்.

டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற டொனி பிளேயர், சீனாவின் மத்திய தொலைக்காட்சிச் சேவைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போதே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அச்செவ்வியில் அவர் தெரிவித்தபோது, ‘சீனாவில்  தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பொருளாதாரச் சீர்திருத்தம் மற்றும் அந்நாட்டின் நிலையான தலைமைத்துவம் காரணமாக, அந்நாடு உலக அரங்கில் அதிக செல்வாக்கு மிக்கதாகத் திகழ்கின்றது. இந்நிலையில், சீனாவுடன் பலமான உறவைப் பேண நாம் விரும்புகின்றோம்’ என்றார்.

மேலும், ‘பிரெக்சிற் ஒப்பந்தத்துக்கு இணங்கிச் செயற்பட நாம் முற்பட்டால், எமக்குச் சீனாவுடனான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் மிக முக்கிய தேவையென்று நான் எண்ணுகின்றேன்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ‘சீனாவுடன் நெருக்கமான உறவை வளர்க்க எண்ணும் பிரித்தானியத் தலைவர்களின் விருப்பத்தை பிரெக்சிற் விவகாரம் பாதிக்காது’ எனவும் அவர் கூறியுள்ளார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !