Main Menu

சீனாவுடன் மிகப்பெரிய மோதல் ஏற்படும்- இந்தியா எச்சரிக்கை!

எல்லைத் தகராறு தொடர்ந்தால் சீனாவுடன் மிகப்பெரிய மோதல் ஏற்படும் என முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் வைரவிழாவில் கொணொளி தொடர்பாடல் மூலம் கலந்துகொணடு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எல்லையில் அத்துமீறிய சீனா இராணுவம், இப்போது இந்திய இராணுவத்தின் தக்க பதிலடியால் எதிர்பாராத பின் விளைவுகளை சந்தித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை மாற்றி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ள அவர், லடாக் எல்லையில் பதற்றம் தொடர்கிறது என கூறியுள்ளார்.

இந்நிலையில், தொடர் அத்துமீறல்களும், அதிரடியான இராணுவ செயற்பாடுகளையும் சீனா தொடர்ந்தால், பெரிய மோதல் ஏற்படுமென அவர் எச்சரித்துள்ளார்.

பகிரவும்...
0Shares