சீனாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்ட நிலையில், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.
உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்டது. ஆனால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.
தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டி உள்ளது. அங்கு குவாங்டாங் மாகாணத்தில் புதிதாக 10 பேருக்கு உள்நாட்டில் பரவும் கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வேறு முக்கிய நகரங்களில் 14 பேருக்கு வெளிநாடுகளில் காணப்படும் புதிய வகைத் தொற்று இருப்பதும் தெரியவந்துள்ளது. ஷாங்காயில் 6 பேருக்கும், புஜியான், குவாங்டாங் நகரில் தலா 3 பேருக்கும, சிசுவான், யுனான் நகரங்களில் தலா ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு கொரோனாவுக்கு யாரும் பலியானதாக தகவல் இல்லை.