சீனாவில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் கல்லறைகள்!

சீனாவிலுள்ள பல்கலைக்கழக வளாகம் ஒன்றில் பழைமையான கல்லறைகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்சீனாவின் குவாங்டோங் மாகாண குவாங்ஷோ நகரில் அமைந்துள்ள சண்-யட்-சென் பல்கலைக்கழக வளாகத்தில் இவ்வாறு 13 பழைமையான கல்லறைகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு 37 பண்பாட்டு சின்னங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சீன மொழியில் சோங்ஷான் பல்கலைக்கழகம் என்று அறியப்படும் சண்-யாட்-சென் பல்கலைக்கழகம் சீனப் புரட்சியின் பெரும் தலைவர்களில் ஒருவரால் 1924ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

1950 மற்றும் 1980களில் இரண்டு மாகாண அகழ்வுகளைத் தொடர்ந்து, வளாகத்தின் ஒரு பகுதியானது நிலத்தடி தொல்பொருளியல் நினைவுச்சின்னங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்பட்டது. அதன் காரணமாக நிர்மாணிப்பதற்கு முன்பாக குறித்த பகுதியில் ஒரு அகழ்வு தேவைப்பட்டது.

ஆதன்படி கடந்த நவம்பர் மாதம் அகழ்வுப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போதே கல்லறைகளும், அற்புதமான வரலாற்றுச் சின்னங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் தகவல்களின் பிரகாரம், சீன வரலாற்றில் மூன்று வெவ்வேறு காலங்களை இந்த கல்லறைகள் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கிழக்கு ஹான் வம்சம், மிங் வம்சம் மற்றும் கிம் வம்சம் ஆகிய மூன்று காலத்துக்கும் உரியவை என்று கூறப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !