சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது- 21 தொழிலாளர்கள் பலி!

சீனாவில் ஷான்ஜி மாகாணம், ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் நேற்று 87 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 21 பேர் பலியாகினர். 66 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

சீனாவில் செயல்படும் நிலக்கரி சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !